இந்திய சீக்கியர்கள் விசா இன்றி புனித பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியா-பாகிஸ்தானின் இடையே அமைக்கப்பட்டு வரும் சிறப்பு வழித்தட பணிகள் தொடர்பாக இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் 18 ஆண்டுகளைத் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக, அந்நாட்டில், தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. அந்நாட்டிற்கு செல்லும் இந்திய சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டது. அதன்படி பஞ்சாப் மாநிலம், தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை 14ஆம் தேதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post