இயற்கை சீற்றங்களின் போது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை எவ்வாறு தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பதை விளக்கும் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.
பேரிடர் காலங்களில் நடத்தப்படும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் குறித்த கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு துறை, உட்பட பல துறைகள் இணைந்து நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து ஒருங்கிணைந்து நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. ஹெலிகாப்டர்கள், விமானங்கள், கடற்படை கப்பல்கள் இதில் பங்கேற்றன. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் உட்பட ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பார்வையிட்டனர்.
Discussion about this post