வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வெங்காய பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசிடம் 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு உள்ளதாகவும், மாநிலங்களில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டால் மத்திய அரசிடம் உள்ள இருப்புகளிலிருந்து மக்களுக்கு விநியோகம் செய்யலாம் எனவும் என ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
வெங்காய தட்டுப்பாட்டை சாதகமாக கொண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராம் விலாஸ் பாஸ்வான் உறுதி அளித்தார்.