தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்திய கடலோர காவல் படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கம் சார்பில் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படடது.
சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் இந்திய கடலோர காவல் படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற புதிய இணையதளம் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை, ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பரதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post