பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர்கள், அவர்களை சந்திக்க அந்த நாட்டிற்கு செல்லும் சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள தூதர்களுக்கு எரிவாயு இணைப்புகள் கொடுப்பதில்லை எனவும், சில உயர் அதிகாரிகளின் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதேபோல தூதரக அதிகாரிகளை சந்திக்க செல்லும், சிறப்பு அதிகாரிகளும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
Discussion about this post