இந்திய விமானப் படையின் மொபைல் கேம் வெளியீடு

விங் கமாண்டர் அபிநந்தனை முக்கிய கதாபாத்திரமாக்கி, முதல் முறையாக மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப் படை வெளியிட உள்ளது. அதற்கான ‘டீசர்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மக்களிடம் தேசப்பற்றை ஊக்குவிக்கவும், விமானப் படையில் இளைஞர்கள் சேர்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்திய விமானப் படை முதல் முறையாக மொபைல் கேம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த விளையாட்டின் டீசரை விமானப் படை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில், பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அபிநந்தன் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விமானப் படையின் மொபைல் கேமை வரும் 31-ம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விளையாட்டை தற்போது ஒருவர் மட்டுமே விளையாட முடியும். அடுத்தகட்டமாக பலர் சேர்ந்து விளையாடும் வகையில் மொபைல் கேம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

Exit mobile version