வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்று அசத்தியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் முறையாக பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய வங்கதேசம் அணி, 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி, அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி, வங்கதேசத்தை விட 241 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணி 13 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முஷ்பிகுர் ரகீம் மட்டும் சிறப்பாக ஆடி 74 ரன்கள் எடுத்தார். 2 நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது. இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி, 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். இதனையடுத்து இந்திய அணி வங்கதேச அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்று, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு – 0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இஷாந்த சர்மாவிற்கு வழங்கப்பட்டது.
Discussion about this post