இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இன்று இந்தூரில் நடைபெறுகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், பந்து வீச்சு தொடங்குவதற்கு முன்னதாகவே கனமழை கொட்டித் தீர்த்ததால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இன்று இரவு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதே மைதானத்தில், இவ்விரு அணிகளும் 18-வது முறையாக மோதுகின்றன. இதுவரை நடந்த 17 போட்டிகளில், இந்திய அணி 11 முறையும், இலங்கை அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டி, இரு நாட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post