ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாளின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராகுல் 9 ரன்கள், மயங்க் அகர்வால் 77 ரன்கள் ,கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரஹானே 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதம் அடித்து அசத்தினார்.முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை எடுத்தது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.தொடர்ந்து இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை எடுத்துள்ளது.விகாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 181 ரன்கள், ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்து தற்போது களத்தில் உள்ளனர்.
Discussion about this post