இந்திய பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டு இருப்பதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று காலை சரிவுடன் தொடங்கியது. பகல் 12 மணி நிலவரப்படி,
440 புள்ளிகள் குறைந்து, 37 ஆயிரத்து 72 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் 239 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 993 புள்ளிகளுடனும் வர்த்தமாகி வருகிறது.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், நாள் முடிவில் 8 ஆயிரத்து 175 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதேபோல், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 586 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 518 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 189 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI 21 ஆயிரத்து 465 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 27 ஆயிரத்து 588 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான SSE 2 ஆயிரத்து 909 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Discussion about this post