கல்வி வளர்ச்சியில் இந்தியாவை முதன்மை நாடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும், சவால்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையில் இருப்பதாக குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்து உள்ளார்.
கோவை நீலாம்பூர் அருகிலுள்ள தனியார் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றி அவர், வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் அனைத்து பரிமாற்றங்களும் இணைய தளமாக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களில் இணையத்தள சேவை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வெங்கைய்யா அவர், மாணவர்கள் வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Discussion about this post