கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் – பி மருந்து வருகிற திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனால், கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்தை விநியோகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கருப்பு பூஞ்சைக்காக ஆம்போடெரிசின்-பி மருந்துக்கான விலையாக ஆயிரத்து 200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆம்போடெரிசின் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக 5 மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.
இதேபோல், இந்த மருந்து உலகில் எங்கு கிடைத்தாலும், அவற்றை வாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகவும், உலக அளவில் உள்ள இந்திய அமைப்புகள் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post