உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
28-வது போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை, ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்வார் என எதிர்பார்த்த நிலையில், ரோஹித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதிகபட்சமாக கேப்டன் கோலி 67 ரன்களும், கேதர் ஜாதவ் 52 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர். ஆப்கானிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சால் ரன் குவிக்க முடியாமல் திணறிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 225 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
Discussion about this post