ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதும் ஆட்டங்கள் தொடர்பாக ஐ.சி.சி. கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் இன்று இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்திய நிலையில், அந்நாட்டு நடிகர்கள் பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேபோல், பாகிஸ்தான் அணியுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் தொடர்பாக துபாயில் 27ம் தேதி நடைபெறவுள்ள ஐ.சி.சி. கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post