இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 தொடரை 5க்கு 0 என்ற கணக்கில் கைபற்றியது. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி, இந்திய அணியை வீழ்த்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்திய அணி வீரர்கள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் சர்மா விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், கேப்டன் கோலி, ராகுல், ஸ்ரேய்ஸ் ஐயர் ஆகியார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமாகவே கருதப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post