இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், ஹாமில்டனில் நடந்த 4 வது போட்டியில் 92 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது. கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தசை பிடிப்பு காரணமாக 4 போட்டியில் விளையாடாத தோனி இந்த போட்டியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக முடிக்க இந்திய வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் கடைசி போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து வீரர்களும் களம் இறங்க உள்ளதால் இப்போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post