ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ள எஸ்-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்பு தொடங்கி விட்டதாக ரஷ்ய துணைத் தலைவர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வான் வெளி பாதுகாப்புக்காக ரஷ்யாவிடம் இருந்து மிகவும் அதிநவீனமான எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், எஸ்-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்பு தொடங்கி விட்டதாகவும், இந்த ஏவுகணைகள் வரும் 2025ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் எனவும் இத்திட்டத்தின் ரஷ்ய துணைத் தலைவர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் அளித்த பேட்டியில், இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் மார்ச் மாதம் 22,23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post