சமூக வலைத்தளமான டுவிட்டர் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டுவிட்டர் முடங்கியது. சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாகக் கருத்துக்களை பதிவிட முடியாமலும் சில இடங்களில் டிவிட்டர் கணக்கின் உள்ளேயே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களிலும் பயன்படுத்த முடியாமல் போனதால் பயன்பாட்டாளர்கள் காரணம் தெரியாமல் தவித்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே கணக்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. திடீரென டுவிட்டர் முடங்கியதன் காரணம் குறித்து அந்நிறுவனமும் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.