இந்தியா தனது அண்டை நாடுகளின் நன்மைக்காக தொடர்ந்து செயலாற்றி வருகிறது என நியூயார்க்கில் நடைபெற்ற சார்க் நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
சார்க் நாடுகளின் வறுமையை ஒழிக்க கடந்த 2017 ம் ஆண்டில் தெற்கு ஆசிய செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதை சுட்டிக் காட்டிய அவர், இதனைத் தெரிவித்தார். தீவிரவாதம் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது எனத் தெரிவித்த ஜெய்சங்கர், தெற்கு ஆசிய நாடுகளுக்கு இடையே வர்த்தக தொடர்புகள் இல்லாததாலும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார். இந்த இரண்டு மாநாட்டிலும், அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றும் போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post