2027ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.8 என்ற அளவில் இருப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா., மற்ற மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.3ஆக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், 2027ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 133 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா தற்போது 2-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post