புயல் உள்ளிட்ட வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதில் உலக அளவில் 4 வது சிறந்த நாடாக இந்தியா உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கடற்கரையில் தேசிய கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகம் சார்பில் 25 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செயற்கை மணற்பரப்பு மறு சீரமைப்பு திட்டத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளதாக குறிப்பிட்டார்.
சுனாமி வருவதை துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post