தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட, இலங்கைக்கு இந்தியா உதவ தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புனித ஞாயிறு பண்டிகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தாக்குதலில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது சில இடங்களில் மீண்டும் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே இலங்கையில் உள்ள இந்திய தூதர் தரன் ஜித் சிங் சாந்து, உயர் அதிகாரிகளான புத்த துறவிகளை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இலங்கையின் தீவிரவாத களையெடுப்பு பணிகளுக்கு, இந்தியா உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த பேச்சுவார்த்தை குறித்து கூறப்பட்டுள்ளது.