மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதுடன் பொருளாதார நிலையும் மேம்பட்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் வங்கிகள் சீர்திருத்தத்திற்கு பிறகு வரி சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.5 முதல் 7 முக்கியத் துறைகள் தேக்கமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் பொருளாதார வளர்ச்சியில் சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளதையும் சுட்டிக்காட்டினார். வங்கிகளுக்கு அதிகளவு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் மேலும் கடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வங்கிகள் மறுசீரமைப்பு மற்றும் பல்வேறு சீர்திருத்தங்கள் தொடர்பாக, பொதுத்துறை வங்கிகளின் உயரதிகாரிகளுடன் வரும் 19ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஏற்றுமதி துறைக்கான போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக புதிய சலுகைகளையும் அறிவித்தார். தொழில் தொடங்க ஏதுவான நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Discussion about this post