சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருவதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்தர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக கூறினார். இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இதனால் சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது குறைந்துள்ளதாகவும், தெற்காசிய நாடுகளில் இந்தியா பொருளாதார மேம்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் நாடாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post