உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஆண்களே அதிகம் உள்ள விமான ஓட்டி பணிகளில் தற்போது பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் பணிபுரிந்து வருகின்றனர். உலகில் உள்ள மொத்த விமானிகளில் பெண் விமானிகள் 5.4 சதவீதமாக உள்ளனர். இதில், இந்தியாவில் உள்ள விமானிகளில், 12.4 சதவீதம் பெண் விமானிகளாக உள்ளனர்.
இந்தியாவில் உள்ள 8 ஆயிரத்து 797 விமானிகளில் ஆயிரத்து 92 பேர் பெண் விமானிகளாக உள்ள நிலையில், இவர்களில், 385 பேர் கேப்டன்களாகவும் உள்ளனர். உலக அளவில் உள்ள சுமார் 1.5 லட்சம் விமானிகளில் 8 ஆயிரத்து 61 பேர் பெண்களாக உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து190 பேர் கேப்டன்களாக உள்ளனர்.
உலகில் உள்ள பெண் விமானிகளின் சராசரி அளவை விட, இந்தியாவில் இரண்டு மடங்குக்கு அதிகமான பெண் விமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post