ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கூறி, சுமார் 38 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படையும் காஷ்மீரில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கேஜிஎஸ் திலோன், காஷ்மீர் டிஜிபி தீபக் சிங் ஆகிய இருவரும், ஸ்ரீநகரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய அவர்கள் காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பிருப்பதாகவும், இதை இந்தியா ஒரு போதும் சகித்துக் கொண்டிருக்காது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், அமர்நாத் யாத்திரையை முடித்த யாத்ரீகர்கள் உடனடியாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் படி காஷ்மீர் உள்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post