காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இந்த நிலையில், இனி இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து, சீனாவின் ஆதரவோடு ஐ.நாவை நாடிய பாகிஸ்தான் மண்ணைகவ்வியது. இதனால் அடுத்தகட்டமாக பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை அணுக உள்ளது. இதனையடுத்து இஸ்லாமபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த இம்ரான் கான், இந்தியாவுடன் பேச வேண்டியது எல்லாம் பாகிஸ்தான் பேசிவிட்டதாக கூறினார். இந்தியாவுடன் எந்த முடிவும் எட்டப்படாததால், இனி பேச்சுவார்த்தையில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த கருத்திற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்சவர்த்தன், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் முழுமையாக போராடாமல் இந்திய மீது பழிப் போடுவது நியாயமற்றது என்று கூறினார்.
Discussion about this post