எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை

இந்திய மற்றும் சீன அரசுகளின் சிறப்பு பிரதிநிதிகள் எல்லை விவகாரம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்திய மற்றும் சீன எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண இருநாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள சிறப்பு பிரதிநிதிகள் அடங்கிய 22-ஆவது ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் தொடங்குவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ மற்றும் இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இருநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

Exit mobile version