இந்தியா, சீனா எல்லை பிரச்சனை மற்றும் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக 21வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் டுஜியாங்யன் நகரில் 21வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வூஹான் மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசினர்.
அப்போது எடுக்கப்பட்ட சில முடிவுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அதிகாரி வாங் யீயும் சிறப்பு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.
எல்லைப் பகுதிகளில் நிலவும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Discussion about this post