இந்திய- சீன எல்லையில் அமைதியை கடைபிடிப்பது என, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, ஆண்டுதோறும் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு டோக்லாம் எல்லையில் பிரச்சனை நிலவியதால், சென்ற ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தை, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இதில், இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா மற்றும் முப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், இந்திய-சீன எல்லையில் அமைதியை கடைபிடிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post