மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசித்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய அணியில் பொல்லார்டு அதிகப்பட்சமாக 58 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் ரிஷப் பண்ட் 65 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது தீபக் சாஹருக்கு வழங்கப்பட்டது.
Discussion about this post