பாகிஸ்தானுடன் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து எல்லைத் தாண்டி வரும் சரக்கு வாகனங்களில் ஆயுதங்கள், போதைப் பொருள், கள்ளநோட்டுகள் போன்றவை இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
கணிசமான கடத்தல் பொருட்கள் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மூலமாகவே இந்தியாவுக்குள் வருவதாகவும், இவை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்களுக்குப் பயன்படுவதாகவும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து சரக்குப் போக்குவரத்துக்கும் எல்லையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் நான்கு நாட்களுக்கு நடைபெற்று வந்த இந்த வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எல்லையோர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
Discussion about this post