ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மற்றும் இரு தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தீர்வு காணப்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஐநாவில் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய நிலைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post