காஷ்மீர் நிலவரம் குறித்து பொய்யான தகவல் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடும் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் நிலவரம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் விவகாரம் இந்திய நாட்டின் உள் விவகாரம் என்று தெரிவித்த அவர், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் நிலைக்காது என்று தெரிவித்தார். தீவிரவாதத்தை கொள்கையாக கொண்டு செயல்படும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டுவது கண்டிக்கதக்க செயல் என்று கூறினார். தொடர்ந்து காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசுவது அர்த்தமற்றது என்று கூறிய அவர், இந்தியாவிற்கு எதிராக பொய்யான தகவல் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடும் என எச்சரித்தார்.
Discussion about this post