இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகாப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகிர் சர்மா, மயங்க் அகர்வால் அபராமாக விளையாடி ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்கா வேகப்பந்தை திறம்பட சமாளித்த இந்த ஜோடி 317 ரன்கள் குவித்த நிலையில் முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தது.
முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய ஹிட்மேன் ரோகித் சர்மா 176 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய புஜாரா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலியும் 20 ரன்களில் நடையை கட்டினார். நங்கூரம் போல் நின்று விளையாடி வந்த மயங்க் அகர்வால், சொந்த மண்ணில் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
Discussion about this post