இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தநிலையில் 2 வது டெஸ்ட் போட்டி கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2ஆம் நாள் ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. 137 ரன்களுடன் கிரிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்தார். 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். 130 ரன்களுக்குள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி – 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், விளையாட்டு
- Tags: இங்கிலாந்து அணிடெஸ்ட் போட்டி
Related Content
மெல்போர்ன் டெஸ்ட் போட்டி: புஜாரா சதம் - இந்தியா 443 ரன்களுக்கு டிக்ளேர்
By
Web Team
December 27, 2018
பெர்த் டெஸ்ட் போட்டி: இந்தியா 283 ரன்களுக்கு ஆல் அவுட்
By
Web Team
December 16, 2018
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள்
By
Web Team
December 14, 2018
அடிலெய்டு டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலிய திணறல், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு
By
Web Team
December 9, 2018
அடிலெய்ட் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள்
By
Web Team
December 8, 2018