இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

Exit mobile version