நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் எதிரொலியாக, சுதந்திர தினத்தின் போது, தீவிரவாதிகளால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தகவல் அனுப்பியது.
இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், இரவு நேரங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Discussion about this post