இந்திய ஆஸ்திரேலிய அணிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்க்ஸில் 177 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். பிறகு களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் ரோகித் சர்மாவின் சதம் மற்றும் ஜடேஜா அக்சரின் அரைசதம் ஆகியவற்றால் 400 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியினர் யாரும் சரியாக விளையாடவில்லை. ஸ்டீவன் ஸ்மித் மட்டும் 25 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டைக் கொடுக்காமல் களத்திலிருந்தார். அவருக்கு யாருமே துணை நிற்கவில்லை. அதற்கு காரணம் அஸ்வின் என்கிற சுழல். அஸ்வின் இந்த இன்னிங்க்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலிய அணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகந்தார். ஆஸ்திரேலிய அணியினர் வெறும் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
இந்தப் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர் இரண்டு இன்னிங்க்ஸையும் சேர்த்து 7 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 70 ரன்களையும் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் சில விதிமீறல்களை செய்ததாக ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்திலிருந்து 25% அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post