வடுவூர் ஏரிக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையுடன் கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரை இந்த ஏரியில் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். வடுவூர் ஏரியை சுற்றிலும் நிலவும் பசுமையான சூழல் காரணமாக வடுவூர் ஏரி பாதுகாப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் ஈரான், ஈராக், சைபீரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகை தருவது வழக்கம். வடுவூர் ஏரியில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினருடன் கல்லூரி மாணவர்களும் இணைந்து மேற்கொண்டனர்.
Discussion about this post