காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 43 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்ததாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததாலும், மேட்டூர் அணைக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 6 ஆயிரத்து 43 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
Discussion about this post