பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கருர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புபகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவின் ஒருசில பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 301 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அணையின் நீர் இருப்பு 6.9 டிஎம்சி-யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக 5 கனஅடியும் என, மொத்தம் 1005 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post