திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரித்துள்ளதால் கரும்பு ஜூஸ் வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் கரும்பு அதிக அளவில் பயிரிட்டு உள்ளது.
நாள் ஒன்றிற்கு 70 முதல் 100 கிலோ வரை கரும்பு ஜூஸ் விற்பனைக்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் செலவினங்கள் போக 400 முதல் 500 ரூபாய் லாபம் கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சாலையோரங்களில் கரும்பு ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது.
Discussion about this post