நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் கொலு பொம்மைகளின் விற்பனை சூடுப் பிடித்துள்ளது.
சிவன்கோவில் மாட வீதிகளில் வித விதமான பொம்மைகள் குவிந்துள்ளன.அம்மன், விஷ்ணு, பள்ளிகொண்ட பெருமாள் என அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பொம்மைகளை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உற்சாகத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த வருடம் புது வரவாக சந்தைக்கு வந்துள்ள அத்திவரதர் பொம்மைகளை குழந்தைகள் முதல் பெரியவாகள் வரை அதிகமானோர் விரும்பி வாங்கிச்சென்றனர். 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதால் வியபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post