சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டரை கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு செயல் வடிவம் கொடுத்து தமிழக அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு நிதியை உயர்த்தி இருப்பதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் தேவைக்கு கூடுதலாக செலவு செய்ய முடியும். தமிழக அரசின் இந்த முடிவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.