இந்தியாவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு, கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 38 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 34 ஆயிரத்து 687 பேருக்கும், குஜராத்தில் 22 ஆயிரத்து 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 12 ஆயிரத்து 88 பேரும், ராஜஸ்தானில் 11 ஆயிரத்து 838 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 10 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
Discussion about this post