மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளலூர், கோட்ட நத்தம்பட்டி, கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் முல்லைப் பெரியாறு அணை கால்வாயில் தண்ணீர் திறந்து உத்தரவிட்ட நிலையில், கண்மாய், குளம், கிணறுகளில் நீர் தேங்கியது. இதனால் வாழை விவசாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்துள்ளதால், வாழை இலை கட்டு 800 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்து, வாழ்வாதாரத்திற்கு வித்திட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post