நெல்லையில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இங்குள்ள ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பினால், குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது கற்கள் விழுந்து சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
Discussion about this post