கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டு மல்லி பூக்களுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம், பெரிய முத்தூர் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்று படுகையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குண்டு மல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 10 முதல் 20 டன் வரையிலும், குறைந்தபட்சமாக 5 முதல் 10 டன் வரையிலும் நேரடியாக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கிய பண்டிகைகளான கௌரி நோன்பு, ஆடிப்பெருக்கை ஒட்டி குண்டு மல்லி பூக்களுக்கான தேவை அதிகரித்து நன்கு விற்பனை ஆகிவருகின்றது. ஒரு கிலோ 400 ரூபாய் முதல் 600 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post