கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அண்மையில் சில சீன நிறுவனங்கள், திறந்த வெளி சந்தை கொள்முதல் முறையில், இந்திய நிறுவன பங்குகளை வாங்கியதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்யமுடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது சீனாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய நிறுவன உரிமைகளை மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் எனவும் அந்நிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய ஹெச்.டி.எஃப்.சி பங்குகளை சீனா வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post